சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் கமர்சியல் காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ. ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. ஆயில் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மற்றும் 19.2 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கிறது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்குவதால் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.342.85க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைகளுக்கான சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்காததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், கடந்த எட்டு மாதமாக சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த ஜன., மாதம் ரூ.ஆயிரத்து 148 ஆக இருந்த சிலிண்டர் பிப்., மாதம் ரூ.ஆயிரத்து 153 ஆகவும், ஜூன்1ம் தேதி முதல் ஆயிரத்து 172 ரூபாய் 20காசுகளாகவும், ஜூலை மாதம் ஆயிரத்து 231 ரூபாய் 20காசுகளாகவும், கடந்த மாதம் ஆயிரத்து 250 ரூபாய் 90 காசுகளாகவும் அதிகரித்தது. சில வாரங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தால், நேற்று கடைகளுக்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 190 ரூபாய் 99 காசுகளாக குறைந்தது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் சிலிண்டர் விலை 59 ரூபாய் 91 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
நன்றி : தினமலர்
Thursday, September 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment