'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நிதிநிர்வாக நடவடிக்கை எடுத்த போதும், வளர்ச்சி பாதிக்காத வகையில் அதிகரிக்க நிதித்துறை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்படும்' என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார்.ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பு ஏற்றுள்ள சுப்பாராவ் நேற்று முதல் முறையாக நிருபர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது;நிதித்துறை சீர்திருத்தம் என்பது யாருக்கு பயன் போய்ச் சேர வேண்டுமோ அதற்கேற்ற நடை முறை, செயல் திட்டங்கள் உருவாக்கப்படும். இது குறித்து மத்திய அமைச்சரவை கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடங்கிய ஒருங்கிணைந்த அறிக்கையை மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கிறது. உலக சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் நமது தேவையுடன் கூடிய வளர்ச்சியை மேற்கொள்ளும் வகையில் இது இருக்கும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான், கடுமையான நிதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை தொட்டுவிட்டு, தற்போது உலகளவில் உள்ள பொருளாதார சூழ்நிலையால் சற்றே தொய்வு அடைந்துள்ளது. தற்போதுள்ள பணவீக்கம், பொருட்கள் வரத்து மற்றும் தேவை போன்ற காரணிகளால் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பணவீக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்படும்.உள்நாட்டு மொத்த உற்பத்தி சதவீத நிலைமை குறித்த ஆய்வு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் நிதி கொள்கையில் இடம் பெறும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவானதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளது.நாட்டின் உடனடி மற்றும் மத்திய தர தேவைகளை கருத்தில் கொண்டு நிதித்துறை சீர்திருத்தங்கள் பொருத்தமான நேரத்தில் கொண்டுவரப்படும். வங்கிகள் சீர்திருத்தம் மேலும் அதிகரிக்கும்இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
நன்றி : தினமலர்
Wednesday, September 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment