தங்கம் விலை அடுத்த சில நாட்களில் மேலும் குறையும். 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 11 ஆயிரம் ரூபாயை எட்டும் என, மும்பை தங்க மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த நான்கு வாரங் களாக தங்கத்தின் விலையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது. அதே மாதத்தின் மத்திய பகுதியில், 13 ஆயிரத்து 567 ஆக உயர்ந்தது. ஜூலை 26ம் தேதி முதல் இந்த விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய். சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை ஒரு அவுன்சு (31.103 கிராம்) 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. டிசம்பர் 2007ம் ஆண்டிற்குப் பின், இப்போது தான் முதல் முறையாக இந்த அளவுக்கு குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி மற்றும் திருமணத்திற்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தோர், முன்பே வாங்கத் துவங்கியுள்ளனர். இருந்தாலும், டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைவதாலும், தங்கத்தை இருப்பு வைப்போர் மற்றும் நகைகள் தயாரிப்போர் மத்தியில் தேவை குறைந்திருப்பதாலும், அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என, மும்பை தங்க மார்க்கெட் வர்த்தகர்கள் கூறியுள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தங்க இறக்குமதி 50 சதவீதம் அளவுக்கு குறைந்தது. முதல் மூன்று மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 101 டன். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 193 டன்.
Tuesday, August 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஏறும்போது வானம் அளவுக்கு செல்லும் என்றும்,
இறங்கும் பொது காலுக்கு கீழே வரும் என்றும்
குழப்பி விடுவது தான் வர்த்தகர்களின் வேலை.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை எனது இந்த பிளாக்கில் பார்க்கலாம்
வால்பையன்
வால்பையன் வருகைக்கு நன்றி
வரைபடம் சென்று பார்த்தேன் தங்கம் மற்றும் ஆயில் இறங்கு முகமாக உள்ளது.
Post a Comment