கொஞ்சம் காலத்திற்கு முன்புவரை உயர்ந்துகொண்டே இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது குறைய துவங்கி இருக்கிறது. இந்த வருடத்தில் மிக குறைந்த அளவாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே சென்றுவிட்டது. யு எஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 36 சென்ட் குறைந்து 121.83 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 21 சென்ட் குறைந்து 122.50 டாலராக இருக்கிறது. ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147.27 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 17 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக கச்சா எண்ணெயின் விலை அதிகமாக இருப்பதாலும், பொருளாதாரத்தில் மந்த நிலை இருப்பதாலும் உலகில் அதிகம் பெட்ரோலை பயன்படுத்தும் அமெரிக்கா இப்போது தேவையை ( டிமாண்ட் ) குறைந்துக்கொண்டது. மேலும் அமெரிக்காவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவும் அதிகரித்துள்ளதாக வந்த தகவலாலும் இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்
4 comments:
good and happy news.
please visit my blog
pugaippezhai.blogspot.com
kovai vijay
கோவை விஜய் வருகைக்கு நன்றி
விலை இன்னும் குறையட்டும்.
// ராஜ நடராஜன் said...
விலை இன்னும் குறையட்டும்.//
ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது.
தற்போது குறைகிற மாதிரி தெரியவில்லை .
Post a Comment