''வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த குறைகள் அல்லது புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி தீர்வாணையம் (பேங்கிங் ஆம்புட்ஸ்மன்) பிரிவில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்,'' என ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் ஜோசப் தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குனர் ஜோசப் கூறியதாவது:
வங்கிகள், 'கிரெடிட் கார்டு' தொடர்பான விவரங்களை வட்டார மொழிகளிலும் கண்டிப்பாக வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் அனைத்து வங்கிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.
வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் பிரதிநிதிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியிலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் செயல்பாடு குறித்த தங்களது புகார்களை தெரிவிக்க, ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், வங்கி தீர்வாணையம் இயங்கி வருகிறது. வங்கிக் கணக்கு செயல்படுவதில் உள்ள குறைகள், வங்கி கணக்கு ஆரம்பிப்பது/முடிப்பதில் தாமதம், வங்கி சேவைகளை வழங்குவதில் உள்ள குறைகள், காசோலை, 'டிடி' பரிசீலனையில் தாமதம், சேவைகளுக்கு முன் அறிவிப்பின்றி கட்டணம் வசூலித்தல், ஏ.டி.எம்., டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாதது, குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அல்லது நாணயங்களை பெற மறுப்பது, டிபாசிட்டிற்கான வட்டி விகிதம் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறையை பின்பற்றாதது, கடன் வழங்குவதில் தாமதம், உரிய காரணங்கள் இன்றி கடன் வழங்க மறுப்பது ஆகியவை குறித்து பொதுமக்கள் இங்கு புகார் தெரிவிக்கலாம். வங்கிகளின் செயல்பாடு குறித்த தங்களது குறைகள்/புகார்களை பொதுமக்கள், ' 'The Banking Ombudsman, c/o Reserve Bank of India, Fort Glacis, 16, Rajaji Salai, Chennai 600001' என்ற முகவரியில் தெரிவிக்கலாம். மேலும் 044-25399174 என்ற தொலைபேசி எண், 044-25395488 என்ற பேக்ஸ் எண் மற்றும் 'bochennai@rbi.org.in' என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜோசப் கூறினார்.

நன்றி : தினமலர்
2 comments:
கடன் அட்டையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் வங்கி தீர்ப்பாயத்தை அணுகி தீர்வும்(பணமும்) கிடைத்தா அப்பாவிகளில் நானும் ஒருத்தனுங்கோ.முடிந்தா இங்க ஒரு எட்டு பாருங்க http://vattiarattai.blogspot.com/
சாமான்யன் வருகைக்கு நன்றி
நானும் மங்களூர் சிவா மற்றும் உங்கள் stock பற்றி செய்தி படிப்பது உண்டு ஆனால் தற்போது அதிகம் நிங்களும் ,மங்களூர் சிவா எழுதுவது இல்லை.
நேரம் கிடைக்கும் போது எழுதவும்.
Post a Comment