Wednesday, July 23, 2008

டாலர் மதிப்பு உயர்ந்தும் இழப்பு அதிகரிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திணறல்

டாலர் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கடந்த ஆண்டு பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. தற்போது, டாலர் மதிப்பு உயர்ந்தும், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால், மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆயிரத்து 500க்கும் அதிகமான நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான பனியன் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றன. கடந்த 2006ம் ஆண்டு, 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனங்களால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு சர்வதேச ஜவுளி வர்த்தக சந்தையில், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 39ஆக குறைந்தது. இதனால், ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் உள்ள பனியன் ஏற்றுமதி யாளர்களுடன் போட்டியிட முடியாமல், புதிய 'ஆர்டர்'களை தவிர்க்கும் நிலை அதிகரித்தது. இத னால், ஏற்றுமதி நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், தொழிலாளர் களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டது. கடந்த 2007ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள் ளது.இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே, டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளதால், வெளிநாடுகளில் புதிய 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்வதில், திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கினர். டாலர் மதிப்பு 39 ரூபாயிலிருந்து 44 வரை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிகட்டுவதுடன், கூடுதல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மூலப்பொருளான நூல் விலை 100 கிலோ கொண்ட கேஸ் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உபரி பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, 'பேப்ரிகேஷன்' நிறுவனங்கள் துணி உற்பத்தி கட்டணத்தை 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல், ஸ்கிரீன் பிரின்டிங், காம்பாக்டிங், எம்பிராய்டரிங், ஸ்டீம் காலண்டரிங், அட்டை பெட்டி தயாரிப்பு, சாய ஆலை போன்ற அனைத்து நிறுவனங்களும் 20 முதல் 30 சதவீதம் வரை கூலியை அதிகரித்துள்ளன. ஏற்கனவே, 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்துள்ளதால், நூல் விலை , உபதொழில் கட்டண உயர்வு போன்றவற்றை காரணம் காட்டி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆடை விலையை அதிகரிக்க முடியாது. இதனால், டாலர் மதிப்பு அதிகரித்தும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்


4 comments:

☼ வெயிலான் said...

ஐயா பாரதி,

நானும் விருதுநகர் தான். திருப்பூர்ல இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?

பாரதி said...

நான் முக்கு ரோடு ,அதாவது ஆர் ஆர் நகர்க்கு அடுத்து இருக்கிறேன்.

☼ வெயிலான் said...

உங்களோட மெயில் ஐடி கொடுங்க.
என்னோட ஐடி veyilaan.ramesh@gmail.com

ராஜ நடராஜன் said...

பாரதிக்கும் வெயிலானுக்கும் வணக்கங்கள்.டாலர் மதிப்பின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் அப்பால் சில விசயங்கள் உள்ளன இந்த சந்தைப்படுத்துவதில்.பத்திர ஒப்பந்த முறைகளில் அப்போதைக்கு அப்போதுள்ள மதிப்புக்குத் தகுந்தமாதிரியான ஒப்பந்தமும் சீரான டாலரின் மதிப்பின்படியும் ஒப்பந்தமுறையும் உள்ளது.நாம் பெரும்பாலும் அப்போதக்கப்போதுள்ள மதிப்பின்படி வியாபாரம் செய்கி
றோமென நினைக்கிறேன்.

சீனாக்காரர்களுக்கு ஏன் இந்த திணறல் இல்லை?

நாம் சந்தைப்படுத்தும் முறையும் அவர்களுக்கு நிகராக இல்லை.ஆனால் அவர்களது உடைகளை விட நமது தரம் அதிகம்.

எங்கும் அவர்களே வியாபித்திருக்கிறார்கள்.