நியூயார்க்: 'பயோ எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பே உலக அளவில் உணவுப் பொருட்கள் விலை 75 சதவீதம் உயர காரணம்' என, உலக வங்கி தெரிவித்துள்ளது. 'உணவுப் பொருட்கள் விலை பெருமளவு அதிகரிக்க பயோ எரிபொருள் உற்பத்தி காரணம் இல்லை. பயோ எரிபொருள் உற்பத்தியால் 3 சதவீத அளவுக்கு வேண்டுமானால், விலை அதிகரித்திருக்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்தது. அதிபர் புஷ்ஷோ, 'இந்தியா மற்றும் சீனாவில் உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்ததே, விலை உயர்வுக்கு காரணம்' என்றார். இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது: உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க, பயோ எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பே காரணம். இதனால் தான், 75 சதவீத அளவுக்கு விலை கூடியுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களைக் கொண்டு நடத்தப் பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், உலக அளவில் 100 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். வங்கதேசம் மற்றும் எகிப்து உட்பட சில நாடுகளில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. வளரும் நாடுகளில் உள்ளவர்களின் வருவாய் அதிகரித்ததால், உணவுப் பொருட்கள் நுகர்வு எதுவும் கூடவில்லை. ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் அமெரிக்காவில், பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததே, உணவுப் பொருள் குறைந்து, விலைவாசி உயர காரணம். பயோ எரிபொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதால், உணவு சப்ளை பாதிக்கப் பட்டு விலைவாசி உயர்ந்து விட்டது. இவ்வாற்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment