Saturday, July 5, 2008

பணவீக்கம் மேலும் உயர்வு


புதுடில்லி: ஜூன் 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், பணவீக்கம் 11.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, அதற்கு முந்தைய வாரம் இருந்த அளவான 11.42 சதவீதத்தை விட 0.21 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.32 சதவீதம். பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள், இரும்பு, உருக்கு, சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வே பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம்.பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளதால், வங்கிகளுக்கு வழங்கும் குறுகில கால கடன்களுக்கான வட்டி வீதத்தையும், ரொக்க கையிருப்பு வீதத்தையும் ரிசர்வ் வங்கி மேலும் அதிகரிக்கும் என, பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படு ரிசர்வ் வங்கி ஏற்கனவே, வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதத்தையும், ரொக்க கையிருப்பு வீதத்தையும் 0.5 சதவீதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி : தினமலர்



No comments: