Saturday, November 28, 2009

ஆச்சரியம்...!ஆனால் உண்மை : ரூ.1 மாத சம்பளம் பெறும் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஒருவர் மாத சம்பளமாக ரூ.1 பெற்று வருகிறார். வேறு எங்கும் அல்ல; நம் இந்தியாவில் தான். அவர் இந்தியாவின் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணைமைச்சர் பிரபுல் படேல் தான். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான ஊதிய விவரங்கள் குறித்து தகவல் தருமாறு பொள்ளாச்சியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு நாடாளுமன்ற செயலகம் உள்பட பல்வேறு துறைகள் தனித்தனியாக பதில் அளித்துள்ளன. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் பொது தகவல் அதிகாரி கௌரிசங்கர் அளித்துள்ள பதிலில், இணையமைச்சர் பிரபுல் படேல் தன்னுடைய மாத ஊதியமாக ரூ.1 மட்டுமே பெறுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதால் அவருக்கான மாத ஊதியம் ஒரு ரூபாயாக வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ திட்டத்தின் கீழ் அவருக்கான தொகை ரூ.500 ஐயும் சேர்த்து பிரபுல் படேலின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.501 மட்டுமே அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


2 comments:

kicha said...

ரூ. 1 சம்பளம் வாங்கும் மத்திய அமைச்சர்- செய்தியை பயன்படுத்தியமைக்கு நன்றி. ஆனால், அது வெளியானது -தினமணியில்- வி.கிருஷ்ணமூர்த்தி
www.vkicha.blogspot.com

பாரதி said...

kicha வருகைக்கு நன்றி

இது செய்தி அல்லவா, நிங்கள் தினமணி நான் தினமலர் பார்த்தேன்