
ரியல் எஸ்டேட் நிலவரத்தில் இப்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தேக்க நிலையால் இந்தியாவில் சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறை கடும் சரிவை சந்தித்திருந்தது. வீட்டு மனை, வீடு விலை 30 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் படிப்படியாக சீரடைந்து வருகிறது. இந்நிலையில், மக்களின் வாங்கும் திறன் உயர்ந்துள்ளது. இப்போது, நிலைமை மீண்டும் மாற்றம் கண்டதால், ரியல் எஸ்டேட் விலை நிலவரம் ஏற்றம் கண்டுள்ளது. கடந் தாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையில், மனை விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது; டில்லியில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அப்பார்ட் மென்ட்களை பொருத்தமட்டில் மும்பை போன்ற பெரு நகரங்களில் விலை 38 சதவீதம் உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment