Wednesday, June 10, 2009

ஸ்டேட் பாங்க்கில் 13,000 பேருக்கு வேலை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்த நிதி ஆண்டில் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அதன் வெவ்வேறு பணிகளுக்காக இந்த 13,000 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. 2008 - 09 நிதி ஆண்டில் நாங்கள் 33,703 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தோம். இந்த நிதி ஆண்டில் மேலும் 13,000 பேரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக் கிறோம் என்றார் ஸ்டேட் பேங்க்கின் உயர் அதிகாரி ஒருவர். முன்னணி வங்கியான எங்களுக்கு இது தேவைப் படுகிறது என்றார். முதலாவதாக நாங்கள் ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி ( ரூரல் ), மற்றும் டெக்னிக்கல் ( பண்ணை துறை ) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார் அவர். இது குறித்து இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் ( ஐபிபிஎஸ் ) இயக்குனர் பாலசந்திரன் பேசியபோது, பொதுவாகவே எல்லா இந்திய பொருத்துறை வங்கிகளுமே இந்த நிதி ஆண்டில் 30,000 பேர் வரை புதிதாக வேலைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன. அதில் 50 சதவீதத்தை ஸ்டேட் பேங்க்கே எடுத்துக்கொள்ள இருக்கிறது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: