நன்றி : தினமலர்
Tuesday, August 12, 2008
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113.81 டாலராகியது
சர்வதேச சந்தையில் கடந்த மாதம் வரை உயர்ந்துகொண்டே வந்து, உலக நாடுகளை நிம்மதி இல்லாமல் இருக்க செய்த கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 113.81 டாலராக குறைந்திருக்கிறது. இது கடந்த 14 வாரங்களில் இல்லாத அளவு குறைவு. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147.27 வரை உயர்ந்து வந்த போது அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த விலை இன்னும் நீங்கவில்லை. அது 2009 வரை நீடிக்கும் என்று சொல்கிறார்கள். அதனால் அங்கு பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. மேலும் உலகில் இரண்டாவது அதிகம் பெட்ரோல் உபயோகிக்கும் நாடான சீனாவும் சமீப காலமாக இறக்குதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்திருக்கிறது. ரஷ்யாவுக்கும் ஜார்ஜியாவுக்குமிடையே இப்போது நடந்து வரும் சண்டையில், ஜார்ஜியாவில் இருக்கும் முக்கிய எண்ணெய் குழாய் சேதமடைந்திருக்கும் என்று முதலில் பயப்பட்டார்கள். இதனால் அந்த குழாய் வழியாக கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால் இப்போது அந்த குழாய் சேதமடையவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஜார்ஜியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடு இல்லை என்றாலும். அந்த நாடு வழியாக செல்லும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பைப்லைன் வழியாக பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அனுப்பப்படுகிறது. ஆசர்பைஜானில் இருந்து ஜார்ஜியா வழியாக துருக்கிக்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
Labels:
கச்சா எண்ணெய் விலை,
வணிகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment