Monday, July 28, 2008

ஏர்-இந்தியா எக்ஸ்பிரசின் 'லேடீஸ் ஸ்பெஷல்' பிளைட்


முழுவதும் பெண்களே பணியாற்றும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஏர்-இந்தியா' நிறுவனத்தின் 'ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்' முழுவதும் பெண்களே பணியாற்றும் விமான சேவை ஒன்று நேற்று இயக்கப்பட்டது. இந்த விமானத்தின் முதல் பெண் பைலட்டாக சாமிலி குரோட்டப் பள்ளியும், இணை பைலட்டாக அம்ரித் நம்தாரியும், பணிப் பெண்களாக பானு, பூட்டியா, திவ்யா, பினல்வேலன்ட் ஆகியோரும் செயல்பட்டனர். 183 பயணிகளுடன் நேற்று மதியம் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டு சென்றது. ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு மொத்தம் 76 பைலட்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் பெண் பைலட்கள்.


6 comments:

ரங்குடு said...

அது சரி. விமானத்தில் போனவர்கள் எல்லோரும் தாய்க் குலம் தானா? இல்லை நமக்கும் இடம் உண்டா?

rapp said...

இதனை செய்த விமான நிறுவனத்திற்கும், பெண் பைலட்டுகளுக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்

பாரதி said...

நண்பர் rangudu,rapp வருகைக்கு நன்றி.

நண்பர் rangudu க்கு கண்டிப்பாக இடமுண்டு.

Bleachingpowder said...

Not really in the context!!

அவங்க எல்லாருக்கும் ஒரு ஐம்பது வயசு இருக்கும். குடிக்க தண்ணி கேட்டாலே முஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

நான் பார்த்தில் மிகவும் Rude ஆன பணிப்பெண்கள் என்றால் அது ஏர்-இந்தியாதான்.

கிரி said...

மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் தான். தொடர்ந்து சாதிக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

பாரதி said...

நண்பர்கள் Bleachingpowder ,கிரி வருகைக்கு நன்றி.
Bleachingpowder அவர்களே
படத்தில் இருக்கும் பெண்களை பார்த்தால் அப்படி தோன்றவில்லை.