நன்றி : தினமலர்
Wednesday, November 12, 2008
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 59 டாலர்தான்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது குறைந்துகொண்டே வருகிறது. நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 21 சென்ட்கள் குறைந்து 59.12 டாலராகத்தான் இருந்தது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு குறைவு. லண்டனின் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 9 சென்ட் குறைந்து 55.62 டாலராகத்தான் இருந்தது. கடந்த மார்ச் 2007க்குப்பின் இப்போதுதான் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. அடுத்த மாதம் அல்ஜீரியாவில் நடக்க இருக்கும் ஓபக் அமைப்பு கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டாலும், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்துகொண்டே வருவதால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வருவதாக சொல்கிறார்கள். ஜூலை மத்தியில் பேரலுக்கு 147 டாலருக்கும் மேல் இருந்த கச்சா எண்ணெய் விலையில் இப்போது 60 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 55 டாலருக்கு கூட வந்து விடும் என்று கிரிடிட் சூசி நிறுவனத்தின் எண்ணெய் ஆய்வாளர் தோபியாஸ் மெராத் சொல்கிறார்.
Labels:
கச்சா எண்ணெய் விலை,
தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment