மகாராஷ்டிராவில் இருக்கும் பள்ளிகளில் மொபைல் போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 10 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனிமேல் மொபைல் போனை பயன்படுத்த முடியாது.மகாராஷ்டிரா முழுவதும் இந்த உத்தரவு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் மொபைலை பயன்படுத்தியது தெரிய வந்தால் ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். இதையே ஒரு ஆசிரியரோ அல்லது பள்ளி அலுவலரோ செய்தால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை பள்ளியின் பிரின்சிபால் தான் நடைமுறை படுத்த வேண்டும். ஆனால் அதே நேரம் அவரும் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்றும், மீறி பயன்படுத்தினால் அவரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.நன்றி : தினமலர்









