நன்றி : தினமலர்
Monday, September 15, 2008
திவாலா ஆகி விட்ட அமெரிக்காவின் நிதி வங்கி லேமன் பிரதர்ஸ்
அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய நிதி வங்கியான லேமன் பிரதர்ஸ் இப்போது திவாலா ஆகும் நிலைக்கு வந்துள்ளது. திவாலா ஆகி விட்டதற்கான அறிவிப்பை அது அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அந்த நிதி வங்கிக்கு ஏற்பட்டுள்ள கோடிக்கணக்கான டாலர் நஷ்டத்தை அடுத்து அது திவாலா நோட்டீஸ் கொடுக்க இருக்கிறது. லேமன் பிரதர்ஸ் திவாலா ஆகி விட்டது என்ற தகவல் வெளியானதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்திருப்பதாலும் இன்று ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. லேமன் பிரதர்ஸை பேலவே நஷ்டத்தில் இருக்கும் மெரில் லிஞ்ச் நிதி வங்கியை பேங்க் ஆப் அமெரிக்கா 50 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதாக சொல்லியிருக்கிறது. இதே போல் லேமன் பிரதர்ஸையும் அதன் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற பார்க்லேஸ் பேங்க்கும், பேங்க் ஆப் அமெரிக்காவும் முயற்சி மேற்கொள்ளும் என்கிறார்கள். இந்நிலையில் திவாலா ஆகி இருக்கும் லேமன் பிரதர்ஸின் நியுயார்க் கட்டிடத்திற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கட்டிடத்தில் இருந்து வெளிவரும் ஊழியர்கள் பெரிய பெரிய அட்டை பெட்டிகளை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் லேமன் பிரதர்ஸ் நிதி வங்கிகளில் சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
Labels:
தகவல்
பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிந்தன
இன்று காலை தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் துவங்கியதுமே நிப்டி 112 புள்ளிகள் குறைந்து விட்டன. அதே போல் மும்பை பங்கு சந்தையிலும் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. அமெரிக்க நிதி நிறுவனமான லேமன் பிரதர்ஸ் இல் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அங்கு ஏற்பட்டுள்ள சிக்கலை தொடர்ந்துதான் இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்தது என்கிறார்கள். காலை 10.07 மணிக்கு மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 710.31 புள்ளிகள் குறைந்து 13,290.50 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 195.50 புள்ளிகள் குறைந்து 4,032.95 புள்ளிகளாக இருந்தது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
பங்கு சந்தை நிலவரம்
சிங்கூர் பிரச்னையால் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு இல்லை
'சிங்கூர் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு ஏற் பட்டுள்ள பிரச்னையால், இந்தியாவில் எங்கள் நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் கார் தயாரிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள் வோம்' என, மெர்சிடிஸ் உள்ளிட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கம், சிங்கூரில் உள்ள டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல கார் தயாரிப்பு நிறுவனங் கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன உயரதிகாரி ரய்னெர் ஸ்முக்கெல் கூறுகையில், 'இந்திய கார் சந்தை மீது எங்களுக்கு பலமான நம்பிக்கை உள்ளது. சிறிய ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள் ளோம். சொகுசு கார்களுக் கான தேவை அதிகரித் துள்ளதால், இந்தியாவில் கார் தயாரிப்பு பணி பாதிக் கப்படாது' என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ஹெண்டர்சன் கூறுகையில், 'சிங்கூர் பிரச்னையால் எங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் முதலீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தியாவில் கார் தயாரிப்புக்காக கூடுதலாக முதலீடு செய்துள் ளோம்' என்றார். நிசான் மோட்டார் இந்தியா நிறுவன மேலாண்மை இயக்குனர் ஷோகி கிமுரா கூறுகையில், 'இந்தியாவில் எங்கள் தயாரிப்பு திட்டங்களை மேலும் விரிவு படுத்த முடிவு செய்துள்ளோம். 'வரும் 2012க்குள் ஒன்பது புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றில் ஐந்து மாடல் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்' என்றார்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)