Saturday, February 21, 2009

பதவி ஏற்ற ஒரே மாதத்தில் பாரக் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது

கடும் எதிர்பார்ப்புடன் அமெரிக்காவின் 44 வது அதிபராக பதவி ஏற்ற பாரக் ஒபாமாவின் செல்வாக்கு, பதவி ஏற்ற ஒரே மாதத்தில் சரிந்து விட்டது. பொருளாதாரத்தில் உலகின் மிகப்பெரிய நாடாக இருக்கும் அமெரிக்கா, அதன் பெருமையை இழந்து வந்த நேரத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரக் ஒபாமாவை அந்நாட்டு மக்கள் பெரிதும் நம்பினர். ஒபாமா அதிபராக வந்தால் பொருளாதார சீர்குழைவை சரி செய்வார் என்றும், அமெரிக்காவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவார் என்றும் அந்நாட்டு மக்கள் நம்பினர். ஆனால் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்ற அவர், ஒரு மாதம் ஆகியும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் செய்யவில்லை என்கிறார்கள் அமெரிக்க மக்கள். மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு, அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் வேலை செய்யவில்லை என்கிறார்கள். பிப்ரவரி 18 - 19 தேதிகளில் சி.என்.என்.மற்றும் ஒப்பினியன் ரிசர்ச் கார்பரேஷன் இணைந்து எடுத்த கருத்து கணிப்பில் 67 சதவீத அமெரிக்க மக்கள் மட்டுமே ஒபாமாவின் நடவடிக்கையில் திருப்தி கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 11 நாட்களுக்கு முன் 76 சதவீதமாக இருந்ததுதான் இப்போது 67 சதவீதமாக குறைந்திருக்கிறது. அவருக்கு ஓட்டளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அவர் மீது நம்பிக்கை போய் விட்டது. இன்னொரு குரூப்பான ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஒப்பினியன் டைனமிக்ஸ் பிப்ரவரி 17 - 18 ல் எடுத்த கருத்து கணிப்பில் 60 சதவீதத்தினர் மட்டுமே ஒபாவுக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுவும் 65 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஒபாமாவின் தனி செல்வாக்கும் ஒரு மாதத்திற்கு முன் 76 சதவீதமாக இருந்தது இப்போது 68 சதவீதமாக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


6 comments:

எட்வின் said...

புஷ் அந்த நிலைமையில் அதிகாரத்தை அவர் கையில குடுத்துட்டு போய்ட்டாரு.ஒபாமா என்னங்க செய்வாரு.அதுக்குள்ள இவர தீர்மானிக்கிறது கொஞ்சம் அதிகம்.2007 டிசம்பர்ல இருந்தே அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. Its too early to say anything about his credibililties

Nurse-2020 said...

nan enna solluthu

பாரதி said...

எட்வின்,Nurse-2020 வருகைக்கு நன்றி

எல்லாம் அதித எதிபார்ப்பு தான் காரணம்

அசோசியேட் said...

பெரிதும் நம்பி கொண்டு இருந்தூம் பயனில்லை என்றே எண்ண தோன்றுகிறது

Incredible Monkey said...

இது எதிர்பார்த்த ஒன்று தான்

பாரதி said...

அசோசியேட், RAN வருகைக்கு நன்றி