Wednesday, November 12, 2008

தொழில் வளர்ச்சி 4.8 சதவீதமாக உயர்ந்தது

இந்தியாவின் தொழில் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் 4.8 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய மாதத்தில் அது, கவலை அளிக்ககூடிய வகையில் 1.42 சதவீதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 7 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது 4.8 சதவீதமாகத்தான் இருக்கிறது. இன்டக்ஸ் ஆஃப் இன்டஸ்டிரியல் புரடக்ஷன் ( ஐஐபி) எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தொழில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் அது 9.5 சதவீதமாக இருந்தது. ஆகஸ்டில் இது 1.3 சதவீதம்தான் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது 1.42 சதவீதமாக உயர்ந்திருந்தது. இந்த இன்டக்ஸில் 80 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் உற்பத்தி, கடந்த வருடம் செப்டம்பரில் 7.4 சதவீதமாக இருந்தது இந்த வருடம் செப்டம்பரில் 4.8 சதவீதமாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மின் உற்பத்தி 4.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது கடந்த வருடத்தில் 4.5 சதவீதமாகத்தான் இருந்தது. சுரங்க உற்பத்தி கடந்த வருடத்தில் 4.9 சதவீதமாக இருந்தது இந்த வருடத்தில் 5.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: