நன்றி : தினமலர்
Tuesday, November 3, 2009
சர்வதேச நிதியத்திடம் 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியது ரிசர்வ் வங்கி
ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தில் இருந்து ரிசர்வ் வங்கி 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 6.7 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்பில், இது 33 ஆயிரம் கோடியாக உள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நிதியத்தின் தலைமையகம் உள்ளது. இந்த சர்வதே நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்புள்ளது. தற்போது, இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்து இருப்பதால், சர்வதேச நிதியத்திடம் இருந்து 200 மெட்ரிக் டன் தங்கம் வாங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து, சர்வதேச நிதியத்திடம் அனுமதி கேட்டது. இதற்கு தற்போது சர்வதேச நிதியகமும் அனுமதி அளித்துள்ளது. சர்வதேச நிதியத்திடம் வாங்கப் படும் தங்கம், இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
Labels:
தங்கம்,
ரிசர்வ் வங்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment