Tuesday, September 1, 2009

புதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வு

புதுச்சேரியில் அனைத்து வகையான சிகரெட்களும், ஒரு சிகரெட்டுக்கு 50 பைசா விலை உயர்ந்துள்ளது. புதுச்சேரி அரசு, சிகரெட் மீதான மதிப்புக் கூட்டு வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. பின், சிகரெட் மீதான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்து அறிவிக்கப்பட்டது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27ம் தேதி முடிவடைந்த கையோடு, சிகரெட் மீதான விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால், பீடி விலை உயரவில்லை. சிகரெட்களுக்கான சில்லரை (எம்.ஆர்.பி.,) விலை அறிவிக்கப்படாத நிலையில், வியாபாரிகள் தன்னிச்சையாக விலை உயர்வை அமல்படுத்தி உள்ளனர். சராசரியாக அனைத்து வகையான சிகரெட்களுக்கும் தலா 50 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து பழைய விலைக்கு வாங்கி வரும் சிகரெட்களை புதுச்சேரி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், உயர்த்தப்பட்ட விலைக்கு விற்பனை செய்கின்றனர். புதுச்சேரியில் சிகரெட் விலை உயர்வால் அதிக அளவு கோல்டு பிளாக் சிகரெட் பயன்படுத்துவோர் பலர், சிசர் பில்டர் மற்றும் சார்ம்ஸ் சிகரெட்டுக்கு மாறியுள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


2 comments:

Anonymous said...

நீங்கள் தீவிர தினமலர் வாசகரோ..?

பாரதி said...

நொண்டிசாமியார் வருக்கைக்கு நன்றி