Monday, July 21, 2008

இன்றும் ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை


மும்பை : நாளை மத்திய அரசு மீது நம்பிக்கை வோட்டு எடுக்க இருக்கும் நிலையில், இன்றைய பங்கு சந்தை கீழே இறங்கி விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மதியம் வரை இந்த எதிர்பார்ப்பு இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் காலை வர்த்தக ஆரம்பத்தில் இருந்தே ஏறி இருந்த சென்செக்ஸ் மதியத்திற்கு மேல் வேகமாக உயர ஆரம்பித்தது. பேங்கிங், ரியல் எஸ்டேட், பார்மா, ஆட்டோ, பவர், எண்ணெய் நிறுவனம் ஆகிய பங்குகள் வேகமாக உயர துவங்கியது. மும்பை பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 214.64 புள்ளிகள் ( 1.57 சதவீதம் ) உயர்ந்து 13,850.04 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 67.25 புள்ளிகள் ( 1.64 சதவீதம் ) உயர்ந்து 4,159.50 புள்ளிகளில் முடிந்தது. ஆசிய பங்கு சந்தைகளிலும் இன்று உயர்வு நிலைதான் இருந்தது. ஷாங்கை, ஹேங் ஷெங், ஜகர்தா காம்போஸைட், ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ், கோஸ்பி, மற்றும் தைவான் வெயிட்டட் போன்றவைகள் 2.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தைகளிலும் இன்று ஏற்ற நிலையே இருந்தது.


நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

மீண்டும் 22000 போகும் போல் உள்ளதே

அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி 1லட்சம் கோடி "பங்கு வணிகத்தில்" வெகு விரவில். (பத்திரிக் களின் யுகத் தகவலின் அடிப்படையில்-இடதுசாரி களின் எதிர்ப்பு ?)

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/