Tuesday, December 8, 2009

வர்த்தக கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்ற வேண்டும்: ரெங்கராஜன்

அரசு கடன் பத்திர வர்த்தக கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கியிடம் இருந்து செபிக்கு மாற்ற வேண்டும் என்று பிரதரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி.ரெங்கராஜன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள செய்தியில், அரசு கடன் பத்திரங்களை மீதான கட்டுப்பாட்டை மாற்ற இயலாது என்று கூறமுடியாது. இதை மாற்ற வேண்டும். அரசு கடன் பத்திர மீதான வர்த்தகத்தை செபியின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும். அதே நேரத்தில் பொருளாதார நிர்வாகத்தில், அந்நிய செலவாணி முக்கிய பங்கு வகிப்பதால், இதன் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கி வசமே இருக்க வேண்டும். நிதி துறை, மற்ற துறைகளுக்கு ஆதரவானதாக இருக்க வேண்டும். பொருளாதார துறை ஸ்திரமாக இருப்பது மட்டுமல்லாமல், திறமையாக செயல்படுவதும் முக்கியம். அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருளாதார துறையின் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, பலவீனத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும் என்று கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: