Tuesday, December 8, 2009

சிறு தொழில்​க​ளுக்கு எப்​போது விடி​யல்?

சில தினங்​க​ளுக்கு முன்பு,​ செக்​யூ​ரி​டிஸ் ஆண்டு எக்ஸ்​சேஞ்ச் போர்டு ஆஃப் இந்​தியா ​(செபி)​ ஒரு முக்​கி​ய​மான அறி​விப்பு செய்​தி​ருக்​கி​றது. சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு என்று தனி​யா​கப் பங்​குச் சந்தை ஏதும் தேவை​யில்லை. தேசிய பங்​குச் சந்தை மற்​றும் மும்பை பங்​குச் சந்​தை​யி​லேயே அவற்​றை​யும் இனி பட்​டி​யல் செய்​ய​லாம். பங்​கு​கள் பரி​வர்த்​த​னை​யும் செய்​ய​லாம் என்​ப​து​தான் அந்த அறி​விப்​பின் சாரம்.

சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளின் தலை​யாய பிரச்னை என்​பது தங்​க​ளுக்​குத் தேவை​யான மூல​த​னத்​தைத் திரட்​டு​வ​து​தான்.

பெ​ரிய நிறு​வ​னங்​கள் மூல​த​னம் திரட்​டு​வ​தற்கு பங்​குச் சந்​தை​க​ளுக்கு வரு​கின்​றன. அப்​ப​டிப்​பட்ட வாய்ப்பு சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு இது​வரை எட்​டாக்​க​னி​யா​கவே இருக்​கி​றது. கார​ணம்,​ இது​தொ​டர்​பான நடை​மு​றை​க​ளும்,​ அதற்​காக மேற்​கொள்ள வேண்​டிய அப​ரி​மி​த​மான செல​வு​க​ளும் ஆகும்.

உ​தா​ர​ண​மாக,​ ஒரு நிறு​வ​னம் முதல்​மு​றை​யாக தங்​கள் பங்​கு​களை பொது​மக்​க​ளுக்கு விற்​பனை செய்து மூல​த​னம் திரட்​டு​கி​றது என்று வைத்​துக் கொள்​வோம். ​(இது இனி​ஷி​யல் பப்​ளிக் ஆஃ​பர் எனப்

​ப​டு​கி​றது)​. ஒரு கோடி ரூபாய் மூல​த​னம் திரட்​டு​வ​தாக இருந்​தா​லும் சரி,​ அல்​லது நூறு கோடி ரூபாய் மூல​த​னம் திரட்​டு​வ​தாக இருந்​தா​லும் சரி,​ அதற்கு ஆகும் செலவு ஏறக்​கு​றைய ஒன்​று​தான். விளம்

​ப​ரச் செலவு,​ படி​வங்​கள் அச்​ச​டித்து வினி​யோ​கம் செய்​தல்,​ பிர​தி​நி​தி​க​ளின் சுற்​றுப்​ப​ய​ணச் செலவு ஆகி​யவை ஒரே மாதி​ரி​தான் அமை​கி​றது.

இந்த அதீ​த​மான செலவே,​ சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​கள் பங்​குச் சந்​தை​யில் நுழை​வ​தற்​குத் தடைக் கற்​க​ளாக உள்​ளன.

பங்​குச் சந்​தை​யில் லிஸ்ட் செய்​யப்​பட்ட சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​க​ளின் பங்​கு​க​ளைப் பண​மாக்​கு​வ​தற்கு பெரும்​பா​லும் "மெர்ச்​சன்ட் பேங்​கர்ஸ்' எனப்​ப​டும் சிறப்பு நிதி அமைப்​பு​க​ளின் உதவி தேவைப்​ப​டும். அவர்​கள் சிறு தொழில் நிறு​வ​னங்​க​ளின் பங்கு பரி​வர்த்​த​னை​யில் அதிக ஆர்​வம் காட்​டு​வ​தில்லை. அவர்​க​ளுக்​குப் பெரிய நிறு​வ​னங்​க​ளி​ட​மி​ருந்து கிடைக்​கக்​கூ​டிய அளவு அதிக ஊதி​யம் சிறு நிறு​வ​னங்​க​ளி​ட​மி​ருந்து கிடைப்​ப​தில்லை.

இ​வற்​றை​யெல்​லாம் அறிந்​துள்ள "செபி' என்​னும் கண்​கா​ணிப்பு வாரி​யம்,​ சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​கள் பங்​குச் சந்​தை​யில் லிஸ்ட் செய்து கொண்டு பரி​வர்த்​தனை செய்​வ​தற்​கும்,​ மூல​த​னம் திரட்​டு​வ​தற்​கும் வச​தி​யாக,​ விதி​மு​றை​களை எளி​மைப்​ப​டுத்​தி​யுள்​ளது. பத்து கோடி ரூபாய்க்​குக் குறை​யா​ம​லும்,​ இரு​பத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மிகா​ம​லும் மூல​த​னம் பெற்​றுள்ள சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு மட்​டுமே இப்​பு​திய,​ எளி​மைப்​ப​டுத்​தப்​பட்ட நடை​மு​றை​கள் பொருந்​தும்.

பு​திய ஏற்​பாட்​டின் முக்​கி​யத்​து​வம் என்ன?​ நம் நாட்​டில் 1995 முதல் கணினி மூலம் பங்கு வர்த்​த​கம் செய்​யும் முறை வந்​து​விட்​டது. அதற்கு முன்பு பெரிய நக​ரங்​க​ளில் மட்​டும் அல்​லா​மல்,​ சிறிய,​ சிறிய நக​ரங்​க​ளி​லும் சிறப்​பா​கச் செயல்​பட்டு வந்த பிராந்​திய பங்​குச் சந்​தை​க​ளின் பயன்​பாடு திடீ​ரென குறைந்​து​விட்​டது. அந்த கால​கட்​டத்​தில் வேக​மாக வளர்ந்த பங்கு வர்த்​த​கத்தை தேசிய பங்​குச் சந்​தை​யும்,​ மும்பை பங்​குச் சந்​தை​யும் பகிர்ந்து கொண்​டன.

அ​தே​போல்,​ எல்லா நிறு​வ​னங்​க​ளும் அவற்​றின் பங்​கு​களை தேசி​யப் பங்​குச் சந்​தை​யி​லும்,​ மும்பை பங்​குச் சந்​தை​யி​லும் பட்​டி​யல் இட்​டுக் கொள்ள முடி​யாது. அதற்​குச் சில குறைந்​த​பட்ச தகு​தி​கள் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளன. தேசி​யப் பங்​குச் சந்​தை​யில் ரூ. 10 கோடி மூல​த​னம் அல்​லது சில நிபந்​த​னை​க​ளு​டன் ரூ. 5 கோடி மூல​த​னம் உள்ள நிறு​வ​னங்​கள்​தான் பட்​டிய​லிட முடி​யும். அதே​போல்,​ மும்பை

பங்​குச் சந்​தை​யில் ரூ. 3 கோடி மூல​த​னம் கொண்ட நிறு​வ​னங்​கள் மட்​டுமே பட்​டிய​லிட முடி​யும்.

வி​ரை​வில்,​ இந்​தத் தொகை​கள் மேலும் அதி​க​ரிக்​கப்​பட உள்​ளன. இந்​நி​லை​யில்​தான் செபி​யின் புதிய அறி​விப்பு வெளி​வந்​துள்​ளது. தேசி​யப் பங்​குச் சந்தை மற்​றும் மும்பை பங்​குச் சந்​தை​யில் சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​க​ளுக்கு ஒரு தனி தளம் ​(பிளாட்​ஃ​பார்ம்)​ கொடுத்​து​விட வேண்​டும் என்​பது செபி​யின் யோச​னை​யா​கும். ரூ. 10 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை மூல​த​னம் உள்ள நிறு​வ​னங்​களை புதிய ஏற்​பாட்​டின்​படி பட்​டிய​லி​ட​லாம். அதன்​பி​றகு அந்த நிறு​வ​னப் பங்​கு​களை பொது​மக்​க​ளும்,​ முத​லீட்​டா​ளர்​க​ளும் வாங்​க​லாம்,​ விற்​க​லாம். ​

நம் நாட்​டில் 3 கோடி சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் நிறு​வ​னங்​கள் உள்​ளன. ஆனால் அவற்​றில் லட்​சக்​க​ணக்​கான சிறு தொழில் நிறு​வ​னங்​க​ளின் மூல​த​னம் ரூ. 10 கோடிக்​கும் குறை​வா​கவே இருக்​கி​றது. ஆகவே செபி​யின் புதிய ஏற்​பாடு அவர்​க​ளுக்கு எந்​த​வி​தத்​தி​லும் பயன் அளிக்​காது என்​பது வெளிப்​படை.

அ​தே​போல்,​ பத்து கோடி ரூபாய்க்கு மேல் மூல​த​னம் உள்ள சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​க​ளுக்​கும்,​ புதிய ஏற்​பாட்​டி​னால் பெரிய நன்மை கிடைக்க வழி​யில்லை. கார​ணம்,​ குறைந்​த​பட்​சம் ஒரு லட்ச ரூபாய்க்கு பங்​கு​கள் வாங்க விரும்​பு​ப​வர்​கள் மட்​டுமே இந்​நி​று​வ​னப் பங்​கு​க​ளுக்கு விண்​ணப்​பிக்க முடி​யும். சிறு முத​லீட்​டா​ளர்​க​ளைப் பொருத்​த​வரை இது போகாத ஊருக்கு வழி சொல்​லு​வ​து​போல்​தான்!​

ஆக,​ சிறு மற்​றும் நடுத்​த​ரத் தொழில் துறைக்கு உண்​மை​யி​லேயே ஊட்​டச்​சத்து அளிப்​பது அவ​சி​யம். கார​ணம் இந்​திய பொரு​ளா​தா​ரத்​துக்கு அவர்​க​ளது பங்கு கணி​ச​மா​னது. உதா​ர​ண​மாக,​ ஒட்​டு​மொத்த தொழில் உற்​பத்​தி​யில் இத்​து​றை​யின் பங்​க​ளிப்பு 40 சத​வீ​தம்;​ அது​மட்​டு​மல்ல,​ சிறிய மற்​றும் நடுத்​த​ரத் தொழிற்​சா​லை​கள் 30 கோடி பேருக்கு வேலை​வாய்ப்​பு​களை வழங்​கி​யுள்​ளன.

அ​ர​சும் பாரத ரிசர்வ் வங்​கி​யும் செய்ய வேண்​டி​யது இது​தான்:​ அந் நிறு​வ​னங்​கள் பல​கா​ல​மாக கோரி வரும் உத​வியை வழங்​கி​னாலே போதும்.

வங்​கிக் கடன் வழங்​கு​வ​தில் கால​தா​ம​தத்​தைத் தவிர்க்க வேண்​டும். இந்​நி​று​வ​னங்​க​ளுக்கு வழங்​கும் கட​னு​தவி வாராக்​க​ட​னாக மாறி​வி​டுமோ என்ற தவ​றான அச்​சத்​தைப் போக்க வேண்​டும். சிறு​தொ​ழில் கடன்​க​ளுக்கு ஏட்​டில் முன்​னு​ரிமை உண்டு. அது நடை​மு​றை​யில் இருக்க வேண்​டும். உரிய நேரத்​தில்,​ உரிய அள​வில் வழங்​கப்​ப​டும் கட​னு​தவி போன்ற ஒரு "டானிக்' வேறு எது​வும் இல்லை.

மா​நில அர​சு​க​ளின் சிறு தொழில் துறை,​ வழக்​க​மான சிகப்பு நாடா அணு​கு​மு​றையை கைவிட்டு,​ புதிய சூழ​லுக்கு ஏற்ப,​ துரித அணு​கு​மு​றை​களை மேற்​கொள்ள வேண்​டும். இவ் விஷ​யத்​தில் குஜ​ராத் மாநில அர​சின் சிறு தொழில் துறை ஒரு நல்ல எடுத்​துக்​காட்டு என​லாம்.

சிறு தொழில் உற்​பத்​திப் பொருள்​களை மத்​திய,​ மாநில அர​சு​கள் கூடு​மா​ன​வரை கொள்​மு​தல் செய்​வதை ஒரு கொள்​கை​யாக ஏற்க வேண்​டும்.

பெ​ரிய நிறு​வ​னங்​கள் சிறு தொழில் பிரி​வு​களி​லி​ருந்து கொள்​மு​தல் செய்​தி​டும் பொருள்​க​ளுக்​குப் பணம் பட்​டு​வாடா செய்​வ​தில் மிகுந்த தாம​தம் ஏற்​ப​டு​கி​றது. இது கண்​டிப்​பா​கத் தவிர்க்​கப்​பட வேண்​டும். இத்​த​கைய பெரிய நிறு​வ​னங்​கள் வங்​கி​க​ளில் கடன் கேட்​கும்​போது,​ சிறு தொழில் "பில்'களை நிலு​வை​யில் இல்லை என்ற உறு​தி​மொழி கொடுக்க வேண்​டும். இந்த நடை​முறை சில ஆண்​டு​க​ளுக்கு முன்பு இருந்​தது. நாள​டை​வில் இது நீர்த்​துப் போய்​விட்​டது.

சிறு தொழில் கூடங்​களை சர்​வ​தே​சத் தரத்​துக்​குச் சம​மாக நவீ​ன​மா​ய​மாக்க வேண்​டும். அதற்கு உதவி புரி​யும் வகை​யில்,​ தொழில் நுட்ப மேம்​பாடு நிதி ஒன்றை உரு​வாக்​கிச் செயல்​ப​டுத்த வேண்​டும். ஏற்​கெ​னவே,​ இந்த நடை​முறை ஜவு​ளித்​து​றை​யில் சிறப்​பா​கச் செயல்​ப​டு​கி​றது. கடந்த பத்​தாண்​டு​க​ளில் ஜவு​ளித்​துறை "டெக்​னா​லஜி அப்​கி​ர​டே​ஷன் ஃபண்டு' திட்​டத்​தின் மூலம் மத்​திய அரசு 66,275 கோடி ரூபாய் வழங்​கி​யுள்​ளது. ஏனோ இது​போன்ற ஒரு திட்​டத்தை சிறு தொழில் துறைக்கு மத்​திய அரசு இது​வரை அறி​மு​கம் செய்​ய​வில்லை.

செ​பி​யின் புதிய ஏற்​பாடு ஒரு நல்ல தொடக்​கம். ஆனால் அது முழு​மை​யான பயன் அளிக்​குமா என்​பது கேள்​விக்​கு​றியே. எனவே,​ மேற்​கூ​றிய ஆக்​க​பூர்​வ​மான செயல்​பா​டு​க​ளின் மூலமே சிறு தொழில் துறைக்கு பிராண வாயு அளிக்க முடி​யும்.
கட்டுரையாளர் : எஸ். கோபா​ல​கி​ருஷ்​ணன்
நன்றி : தினமணி

No comments: