Saturday, December 5, 2009

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.392 குறைந்தது

தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் வரை ஜெட் வேகத்தில் ஏறியபடி இருந்தது. கடந்த 1 ம் தேதி திடீரென தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்தது. கடந்த திங்கள் முதல் புதன் வரை 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு 500 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறையத் தொடங்கியது.
வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.1707 ஆக இருந்தது. நேற்று அது ரூ.1687 ஆக குறைந்தது. இன்று (சனி) தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் இன்று காலை நிலரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1638 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரண தங்கம் இன்று காலை ரூ.13,104 ஆக விற்பனை செய்யப்பட்டது. இது நேற்றைய விலையை விட ரூ.392 குறைவாகும்.
ஒரு கிராமிற்கு 49 ரூபாய் சரிவு ஏற்பட்டதால் இன்று நகை வாங்க சென்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த விலை சரிவு தற்காலிகமானது தான் என்று நகை வியாபாரி ஒருவர் கூறினார். கடந்த 2 நாட்களில் ஒரு பவுன் தங்கம் விலை 624 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் தங்கம் விலை சரிவு இந்த அளவுக்கு இருந்தது இல்லை.
நன்றி : தினமலர்


No comments: