Monday, November 23, 2009

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி: ரிசர்வ் வங்கி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி‌யை அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ‌பொதுவாக டாஸ்மாக் கடைகளில் தான் அதிகமாக கள்ளநோட்டுகள் புழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு கள்ளநோட்டு கண்டறியும் பயிற்சி அளிப்பதன் மூலம் கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்கான நடவடிக்கைகள் எடுக்க துவங்கி உளளது. கள்ளநோட்டு சம்பவங்களில் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்காக, வரும் டிசம்பர் முதல் வாரம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 6500 டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் மேற்பார்வையாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கள்ளநோட்டு கண்டறிவது குறித்த பயிற்சி அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயிற்சியை 34 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அளிக்க உள்ளனர். டிசம்பர் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை தாலுகாவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: