பிரமிட் சாய்மீர நிறுவனத்திற்கு பங்கு வர்த்தகத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு தடை செய்யப் பட்டுள்ளது. இதனை பங்குகள் பரிவர்த்னை மையமான செபி தெரிவித்துள்ளது. பங்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு, செபியை ஏமாற்றும் நோக்கில் விதிகளை பயன்படுத்தி உள்ளது ஆகியவையே இந்த தடைக்கு காரணம் என செபி அமைப்பு தெரிவித்துள்ளது.2006ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில் நிறுவன ஊழியர்களுக்கு 4,22,200 பங்குகளை ஒதுக்கியதாக பிரமிட் சாய்மீர நிறுவனம் தெரிவித்தது. இதில் 98.5 சதவீத பங்குகளை 7 பேருக்கு மட்டுமே ஒதுக்கி உள்ளது. ஆனால், இந்த ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரியவும் இல்லை, அவர்களுக்கு மாதசம்பளமும் அளிக்கப் பட வில்லை என்று தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், செபியை ஏமாற்றும் நோக்கில் பிரமீட் சாய்மீர நிறுவனம் நடத்து கொண்டதாக கூறி பங்கு வர்த்தகத்திலிருந்து தடைவிதிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்







No comments:
Post a Comment