Tuesday, October 13, 2009

இந்திய சாலைகளில் பவனி வர காத்திருக்கும் அமெரிக்க பைக்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்ஸன் பைக் உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவிலும் இந்த பைக் விற்பனை துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் இந்த பைக் இந்தியாவில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் சார்பில் பல மாடல்களில் பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் 15 மாடல் பைக்குகளாவது, இந்தியாவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டது.
ஹார்லி டேவிட்ஸன் பைக் விற்பனைக்கான டீலர்ஷிப் பெற, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத வகையில், இந்தியாவில் இந்த பைக்குக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. எனவே, டீலர்ஷிப் பெறுவதிலும் ஏராளமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். துவக்கத்தில் பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை மற்றும் டில்லியில் மட்டும் டீலர்ஷிப் துவக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது காணப்படும் வரவேற்பை கருத்தில் கொண்டு, டீலர்ஷிப்புக்காக விண்ணபிக்கும் காலக்கெடு நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பைக் கிடைக்கும் வகையில், டீலர்ஷிப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்கின் விலை ரூ.3.5 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
நன்றி : தினமலர்


No comments: