நன்றி : தினமலர்
Tuesday, October 13, 2009
நின்ஜா 250 ஆர் பைக் விலை ரூ.2.69 லட்சம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஜப்பானின் கவாஸாக்கி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் பல சொகுசு பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், கவாஸாக்கி பஜாஜ் சார்பில், நின்ஜா 250 ஆர் என்ற பெயரில் புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த பைக்கின் விலை ரூ.2.69 லட்சமாக இருக்கும். ஐரோப்பிய நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபியூல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி என்ற தொழில்நுட்பம் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 42 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. இந்தியாவில் ஏற்கனவே, யமஹா மற்றும் சுசூகி நிறுவனங்கள் சார்பில் சொகுசு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு போட்டியாக தற்போது, நின்ஜா 250 ஆர் பைக் களத்தில் குதித்து உள்ளது. டெலஸ்கோபிக ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் யுனி டிரக் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கின் முன்பக்க மற்றும் பின் பக்க பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக், கவாஸாக்கி நிறுவனத்தின் தாய்லாந்து தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் ஒன்றாக இணைக்கப்படும். வெளிநாட்டில் இருந்து முழுமையான பைக்காக இறக்குமதி செய்தால், 100 சதவீத வரி செலுத்த வேண்டும். இதை தவிர்ப்பதற்காகவே, உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு முழு மைக்காக உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக 11 சதவீத வரி தான் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், நின்ஜா 250 ஆர் பைக்கின் விலை ரூ.2.69 லட்சம் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment