Thursday, October 22, 2009

இந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது டோயட்டா

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான டோயட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் உள்ள அதன் நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ‌பெங்களூரில் டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சுடன் இணைந்து டோயட்டா மோட்டார் நிறுவனம், ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் தனது கார் நிறுவன கிளை ஒன்றை நிறுவியுள்ளது. இதுகுறித்து, டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ஹிரோஷி கூறும்போது, இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பிற்கு அதிகமான மனித உழைப்பு தேவைப் படுகிறது. இதற்காக 2 ஆயிரம் பேரை மேலும் பணியில் அ‌‌மர்த்த உள்ளோம். வேலையாட்களை பணியமைத்துவதற்கான வேலைகளை ஆரம்பிதது விட்டோம். புதிய சிறிய வகை கார் அறிமுக திட்டம் வரும் 2011க்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


2 comments:

velji said...

நல்ல செய்தி!ஒரு நாட்டின் பொருளாதார பலத்தை கணிக்கும் காரணிகளில் ஒன்றாக கார் உற்பத்தி இருப்பதாக படித்திருக்கிறேன்.

ers said...

நண்பர்கள் கவனத்திற்கு

Tamil

Web Submit

(coming soon) - Auto Submit

Tamil News Submit

English

Top Blogs

Cinema

Cine Gallery