Saturday, March 21, 2009

' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' உறுப்பினர்கள் இனி அமெரிக்காவில் பிராக்டீஸ் செய்யலாம்

' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' ( இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க்ஸ் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ) யில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. இனிமேல் அவர்கள் இந்த பட்டத்தை கொண்டே அமெரிக்காவிலும் பிராக்டீஸ் செய்யலாம். அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்காவில் இருக்கும்' ஐ எம் ஏ ' ( இன்ஸ்டிடியூட் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ஸ் ) யிடம் ' ஐ சி டபிள்யூ ஏ ஐ ' பெற்றிருக்கிறது. இரு இன்ஸ்டிடியூட்களும் இதற்கான பரஸ்பர அங்கீகாரத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இது குறித்து ஐ சி ட பிள்யூ ஏ ஐ தலைவர் குணால் பானர்ஜி தெரிவிக்கையில், இந்த ஒப்பந்தப்படி, ஒரு இன்ஸ்டிடியூட்டில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தானாகவே அடுத்த இன்ஸ்டிடியூட்டிலும் உறுப்பினராகி விடுகிறார்கள் என்றார். ஆனால் ஐ எம் ஏ யில் உறுப்பினர்களாக இருக்க விரும்புபவர்கள், ஐ சி டபிள்யூ ஏ ஐ யிலும் தொடர்ந்து உறுப்பினாக இருக்க வேண்டும். அதை விட்டு விடக்கூடாது என்றார். அமெரிக்க ஐ எம் ஏ யுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை போலவே கனடாவில் உள்ள ஐ எம் ஏ உடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனவே இங்கு ஐ சி டபிள்யூ ஏ ஐ படித்தவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பிராக்டீஸ் செய்யலாம் என்றார். உலக பொருளாதாரத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் இந்த இரு நாடுகளிலும் தான் இருக்கிறது என்று சொன்ன பானர்ஜி, இதனால் இந்திய காஸ்ட் அக்கவுன்டன்ட்களுக்கு அங்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார். இந்தியாவில் காஸ்ட் அக்கவுன்டிங் படித்து தகுதி பெற்றவர்கள் 42,000 பேர் இருந்தாலும் 29,000 பேர் மட்டுமே ஐ சி டபிள்யூ ஏ ஐ யில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் வெறும் 1,700 உறுப்பினர்கள் மட்டுமே காஸ்ட் அக்கவுன்டன்ட்களாக பிராக்டீஸ் செய்கிறார்கள். மீதி பேர் நிதி மற்றும் அக்கவுன்டிங் துறையில் பணியாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றார் பானர்ஜி.
நன்றி : தினமலர்


No comments: