Friday, November 21, 2008

சிங்கப்பூர் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக அறிவிப்பு

ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வந்த சிங்கப்பூர், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி அடைந்து விட்டதாக அறிவித்திருக்கிறது. இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி, வீழ்ச்சி அடைந்திருக்கும் முதல் ஆசிய நாடு சிங்கப்பூர்தான். சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த நாட்டின் ஜூலை - செப்டம்பர் மூன்றாவது காலாண்டு வளர்ச்சி, 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி என்று சொல்லப்பட்டிருக்கிறது. 6.3 சதவீத நெகட்டிவ் வளர்ச்சிதான் இருக்கும் என்று கணித்திருந்தார்கள். ஆனால் அதற்கும் மேலாக 6.8 சதவீத நெகட்டிவ் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் ஒரு நாடு நெகட்டிவ் வளர்ச்சி அடைந்து விட்டால் அந்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லப்படும். இப்போது ஆசியாவிலேயே முதல் நாடாக சிங்கப்பூர், தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக நெகட்டிவ் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஹாங்காங் மற்றும் ஜப்பானும்கூட நெகட்டிவ் வளர்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையல், அடுத்த ஆண்டிலும் ( 2009 ) அந்நாட்டின் வளர்ச்சி ஒரு சதவீத நெகட்டிவ் வளர்ச்சியாகத்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதியை மட்டுமே நம்பி சிங்கப்பூரின் வளர்ச்சி இருக்கிறது. இப்போது உலகெங்கும் நிலவும் பொருளாதார சீர்குழைவு காரணமாக சிங்கப்பூரின் பொருட்களுக்கு உலக நாடுகளிடையே டிமாண்ட் குறைந்து விட்டது. இதன் காரணமாக ஏற்றுமதி குறைந்து போய், ஒட்டு மொத்த வளர்ச்சியும் நெகட்டிவ் நிலைக்கு போய்விட்டது. வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தவிர, பொதுவாக எல்லா நாடுகளிலுமே வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதால், வர்த்தகத்திற்காக சிங்கப்பூரின் டிரான்ஸ்போர்ட் மற்றும் அதன் சேமிப்பு கிட்டங்கியை பயன்படுத்துவதும் குறைந்து, அதனாலும் வளர்ச்சி பாதித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


5 comments:

ராஜரத்தினம் said...

நான் கூடிய விரைவில் அங்கு பணி புரிய போகிறேன். பின்பு எப்படி எனக்கு வேலை கிடைத்தது?

சீனு said...

இந்த வீழ்ச்சியின் பலன் இன்னும் கொஞ்ச நாள் கழித்து (நீங்கள் அங்கே போகும் போது) தெரியலாம்.

ராஜரத்தினம் said...

என்னை தேர்வு செய்ய அரம்பித்ததே இந்த அக்டோபரில் தான். அப்பொழுது ஏற்கனவே வீழ்ச்சி இருக்கிறதே?

பாரதி said...

Raja,seenu வருகைக்கு நன்றி,தங்கள் எந்த துறைக்கு தேர்வு செய்யபட்டிர்கள் என்பதை பொறுத்து உள்ளது .

தென்றல்sankar said...

நண்பர்களே!
பாரதி சொல்வது உண்மைதான்.
இங்கு சில கட்டுமானத்துறை நிறுவனங்களில் பலபேரை வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர்.
சில நிறுவனங்களில் ஊதியத்தை குறைத்துவிட்டார்கள்.பல நிறுவனங்களில் புதிதாக ஆள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.எனது நிறுவனத்தில் இந்த வருட போனஸ் இல்லை என பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்கள்.வேண்டுமென்றால் வேலைபாரு இல்லையென்றால் செல் அப்படீனு சொல்லுராங்க.
என்றும் அன்புடன்
சங்கர்