Wednesday, July 30, 2008

இந்தியா - சீனா இணைந்து போராடியும் உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது


ஜெனிவா உலக வர்த்தக அமைப்பில் கடந்த 9 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து விட்டது. 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கடந்த பல நாட்களாக கடுமையாக உழைத்து நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது.விவசாய பொருட்கள் இறக்குமதி சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்திற்கு இந்தியா மற்றும் சீனா இணைந்து மறுப்பு தெரிவித்ததால் கடந்த 9 நாட்களாக நடந்த பலதரப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியை கொண்டுவந்துள்ளது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே உள்ள பிரச்னை அல்ல. சீனா உள்பட சுமார் 100 நாடுகளுக்கு பிரதிநிதியாகத்தான் இந்தியா, அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தை முறிந்தது குறித்து, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், இது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார். இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அவரவர்கள் நாட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றார்.


நன்றி : தினமலர்


3 comments:

கோவை விஜய் said...

//இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அவரவர்கள் நாட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என்றார். //

விவசாயம் கவணிக்கப்படாததால் தான் இந்த விஷ விலையேற்றம் உணவுப் பொருட்களில் .நிலவும் உணவுப் பற்றாக்குறை.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ராஜ நடராஜன் said...

காலையில் பத்திரிகையில் படம் மட்டும் பார்த்தேன்.தகவலை சுருக்கமாக சொன்னதற்கு நன்றி.

பாரதி said...

கோவை விஜய்ராஜ,நடராஜன் வருகைக்கு நன்றி