Thursday, July 31, 2008

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 126 டாலராக உயர்ந்தது


சர்வதேச சந்தையில் பேரலுக்கு 122 டாலருக்கும் கீழே போயிருந்த கச்சா எண்ணெய் விலை இன்று 126 டாலருக்கு மேல் உயர்ந்து விட்டது. யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை 4.58 டாலர் உயர்ந்து பேரலுக்கு 126.77 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 4.39 டாலர் உயர்ந்து 127.10 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் கிடைத்து வந்த கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துள்ளதாக அமெரிக்க எனர்ஜி துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாக சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் அமெரிக்க கச்சா எண்ணெய் சப்ளை 81,000 பேரல்கள் குறைந்து 295.2 மில்லியன் பேரல்களாகி விட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து விலை உயர்ந்து விட்டது. ஜூலை 11ம் தேதி 147 டாலருக்கும் மேல் சென்ற கச்சா எண்ணெய் விலை நேற்று 122 டாலருக்கும் குறைவாக போனது. அதற்கு டாலரின் மதிப்பு சிறிது அதிகரித்திருப்பதும், அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை ( டிமாண்ட் ) குறைந்து போனதும் தான் காரணம் என்று சொன்னார்கள்.

நன்றி : தினமலர்


3 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இன்னைக்குத்தான் உங்க ப்ளாக் பார்த்தேன். வாழ்த்துகள்.தொடருங்கள் உங்க ப்ளாக் பணியை.

பாரதி said...

சாமான்யன் வருகைக்கு நன்றி

கோவை விஜய் said...

கச்சா என்ணெய் விலை 200 டாலுருக்கும் செல்லும் என்கீறார்களே!

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/