நன்றி : தினமலர்
Friday, November 6, 2009
அந்நிய நேரடி முதலீடு சரிந்தது
செப்டம்பர் மாதத்தில் அந்நிய நேரடி முதலீடு சரிவினை கண்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. இதனால் வேலையிழப்பு, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் மக்கள் சிக்கினர். ஆனால், இந்தியாவில் போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டதன் காரணமாக, பொருளாதார சரிவில் இருந்து இந்தியா தப்பியது. இதனால், அந்நிய முதலீடு இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி, மகிழ்ச்சியையும் அதிகரித்தது. இந்நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்து வந்த அந்நிய முதலீடு, இந்த செப்டம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்தியில், இந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய முதலீடு 54 சதவீதம் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிய முதலீடு, 11 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது இந்தாண்டு 5 ஆயிரத்து 452 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது தவிர, கடந்த நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் 80 ஆயிரத்து 840 கோடி ரூபாயாக இருந்த அந்நிய முதலீடு, இந்த நிதியாண்டில் 71 ஆயிரத்து 910 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Labels:
தகவல்,
பொருளாதாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment