Wednesday, November 4, 2009

சரிவில் இருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 507 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று காலை தொடங்கும் போது ஏற்றத்தை சந்தித்தது. நேற்று இந்திய பங்கு வர்த்தகம், வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இரண்டு மாதங்கள் இல்லாத அளவு 491 புள்ளிகள் சரிந்து கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை வர்த்தகம் தொடங்கும் போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218.29 புள்ளிகள் உயர்ந்து 15,623.23 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 64.10 புள்ளிகள் உயர்ந்து 4,628.00 புள்ளிகளோடு தொடங்கியது.
நேற்று கடும் சரிவினை கண்ட இந்திய பங்குச் சந்தை, இன்று மிகுந்த ஏற்றத்தை கண்டது, முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஆர்.ஐ.எல்., பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வினை கண்டன.
மெட்டல் பங்குகள் 5.5 சதவீதமும், ஐ.டி., எண்ணெய், மற்றும் எரிப்பொருள், வங்கி, ஆட்டோ, ஹெத்கேர், எப்.‌எம்.சி.ஜி மற்றும் பவர் உள்ளிட்டவற்றின் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்வினை கண்டன.
காலை வர்த்தகம் தொடங்கிய போது அதிகம் ஏற்றமடைந்த பங்குகள்: ரிலையன்ஸ் இன்டஸ்டிரி பங்குகள் 3.38 சதவீதம் உயர்ந்து 1,882.20 ரூபாய்க்கும், இன்போசிஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் 2.32 சதவீதம் உயர்ந்து 2,189 ரூபாய்க்கும், ஸ்டீர்லைட் இன்டஸ்டிரி 2.47 சதவீதம் உயர்ந்து 740 ரூபாய்க்கும், டாடா ஸ்டீல் பங்குகள் 0.43 சதவீதம் உயர்ந்து 447.50 ரூபாய்க்கும், டி.எல்.எப் லிமிடெட் பங்குகள் 2.96 சதவீதம் உயர்ந்து 346.50 ரூபாய்க்கும் வர்த்தமாயின.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 507.19 புள்ளிகள் குறைந்து 15912.13 புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 146.90 புள்ளிகள் அதிகரித்து 4710.80 புள்ளிகளோடும் நிலைப்பெற்றது.
நன்றி : தினமலர்


No comments: