Friday, August 21, 2009

பிற வங்கி ஏடிஎம்களை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம்!

எந்த ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம், கட்டணமில்லை என்ற அறிவிப்பு வெளியானதும் கார்டும் கையுமாக ஏடிஎம் வாசல்களில் க்யூவில் காத்திருப்பவர்கள் உற்சாகத்தில் துள்ளினர்.

இப்போது அந்த அறிவிப்பில் ஒரு மாறுதல்...

பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் அட்டைகளை மற்ற வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.20 முதஸ் 75 வரை வங்கிக்கேற்ப கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது.
இதனால் குறிப்பிட்ட வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் கருவியைத் தேடி அலைந்தனர் மக்கள் . பல ஏடிஎம்களில் பெரிய க்யூ நீள்வது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில்தான், அரசு வங்கி, தனியார் வங்கி என்ற பேதமில்லாமல், எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அதை வைத்து கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இப்போது அதிலும் ஒரு மாறுதல்...

குறிப்பிட்ட வங்கியின் அட்டையை பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படுமாம்.

அக்டோபர் மாதத்திலிருந்து இந்த புதிய திருத்தம் அமலுக்குவரும் என்று அனைத்து வங்கிகள் சங்கத்தின் துணை தலைமை அலுவலர் உன்னிகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 80 அரசு, தனியார், கூட்டுறவுத் துறை சேர்ந்த வங்கிகளின் 40000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
நன்றி : தட்ஸ்தமிழ்

2 comments:

வனம் said...

வணக்கம் தீப்பெட்டி

பிறகு வங்கித்துறை எப்படித்தான் சம்பாதிப்பதாம்.

யாறும், யாறுக்கும் சேவை செய்ய இல்லை -- எல்லாவற்றிலும் என்ன ஆதாயம் என்பதுதான் குறிக்கோள்.

நம் சமூகத்தில் பிள்ளை பெற்றால் கூட பிறகு அவர்கள் பெற்றோரை பார்க்க வேண்டும் என கட்டுப்பாடு மிக்கது -- அண்னையின் பாசம்கூட அன்பல்ல தேவைகருதியே

இராஜராஜன்

பாரதி said...

கருத்துக்கு நன்றி இராஜராஜன்