நன்றி : தினமலர்
Tuesday, July 21, 2009
குறைந்த விலை வாட்ச்சுகளை தயாரித்து விற்பனை செய்ய கேஸியோ திட்டம்
வாட்ச்சுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பிரபல ஜப்பான் நிறுவனமான கேஸியோ, குறைந்த விலை வாட்ச்சுகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து இந்தியாவின் சிறிய மற்றும் நடுத்தர நகர்களில் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வாட்ச் விற்பனையில் 40 சதவீத வளர்ச்சியை அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே போல் அதன் சேல்ஸ் பாயிண்ட்களையும் இரட்டிப்பாக்க முடிவு செய்திருக்கிறது. நாங்கள் எங்கள் பிசினஸ் செயல்திட்டத்தை மாற்றி விட்டோம். மெட்ரோ நகரங்களில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கு செல்ல தீர்மானித்து விட்டோம் என்றார் கேஸியோ இந்தியாவின் தலைவர் ( சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் ) குல்புஷன் சேத். இப்போது இந்தியாவில் 600 அவுட்லெட்களில் எங்களது வாட்ச்சுகள் கிடைக்கின்றன. அதை 2010ல் 1,200 ஆக உயர்த்த முடிவு செய்திருக்கி றோம். அவைகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் இருக்கும் என்றார் அவர். அவர் மேலும் தெரிவித்தபோது, இந்த ஆண்டில் மட்டும் நாங்கள் 70 - 80 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அவைகள் ரூ.3,000 க்கும் குறைவான விலையில் இருப்பவை. இன்னும் பல புது மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போது கேஸியோவின் சுமார் 800 வகையான வாட்ச்சுகள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. அவைகள் ரூ.30,000 வரை விலையில் இருப்பவை. மேலும் இவைகள் அனைத்தும் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு இங்கு விற்கப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment