Tuesday, July 21, 2009

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் - ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் மோதல் - செப் 1 ல் மறு விசாரணை

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கே.ஜி.பேசின் ) முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எடுக்கும் கேஸை பகிர்ந்து கொள்ளும் விதம் குறித்து, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் நிறுவனங்களுக்கிடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து பாம்பே ஐகோர்ட் அளித்த இடைக்கால உத்தரவில், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சசுக்கு 28 எம்எம்எஸ்சிஎம்டி ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு க்யூபிக் மீட்டர் பெர் டே ) கேஸை, எம்எம்பிடியு ( மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ) ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸோ, எம்எம்பிடியு ஒன்றுக்கு 2.34 டாலர் விலையில் கொடுக்க முடியாது என்றும் 4.2 டாலர் விலையில்தான் விற்க முடியும் என்றும் தெரிவித்தது. எனவே இரு நிறுவனங்களும் இந்த குறித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்று பாம்பே ஐகோர்ட் தெரிவித்திருந்தது. தேவைப் பட்டால் இந்த விஷயத்தில் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாய் கோகிலாபென்னின் கருத்தையும் கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. இந்த இடைக்கால உத்தரவால் பயன் அடைந்தது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அவர்களுக்கு 2.34 டாலர் விலையில் 28 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். அது தவிர என்டிபிசி நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் கொடுக்க இருக்கும் 12 எம்எம்எஸ்சிஎம்டி கேஸை, அது பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த கேஸூம் ரிலையன்ஸ் ரிசோர்சசுக்கே வந்து விடும். அப்போது அதற்கு 40 எம்எம்எஸ்சிஎம்டி கேஸ் கிடைத்து விடும். ஆனான் பாம்பே ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது குறித்த மறு விசாரனையை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கு அடியில் கிடைக்கும் கேஸ் அரசாங்கத்திற்கு தான் சொந்தம். எனவே அதை பிரித்துக்கொள்வது பற்றி இரு நிறுவனங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரித்துக்கொள்ளலாம் என்று சுப்ரீம் தெரிவித்திருக்கிறது.

நன்றி : தினமலர்



1 comment:

ரவி said...

வெரிகுட் தீப்பெட்டி. தட்ஸ் தமிழ் பார்ப்பதில்லையா நீர் ?