நன்றி : தினமலர்
Tuesday, July 21, 2009
சரிவில் முடிந்த பங்கு சந்தை
கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் 13.4 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்த மும்பை பங்கு சந்தை இன்று சரிவில் முடிந்திருக்கிறது. இன்று வர்த்தக நேரத்தில் 15,234 மற்றும் 14,955 புள்ளிகளுக்கிடையே இருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 128.52 புள்ளிகள் குறைந்து 15,062.49 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 33.15 புள்ளிகள் குறைந்து 4,469.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஐ.டி, பவர், ரியாலிட்டி,மற்றும் பேங்கிங் பங்குகள் சரிந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் ஐ.டி. இன்டக்ஸ் 1.7 சதவீதம் குறைந்திருந்தது. டி.சி.எஸ்., எம்பசிஸ், மற்றும் டெக் மகிந்திரா பெரும் சரிவை சந்தித்த நிறுவனங்கள். அதே போல் பவர் இன்டக்ஸ் 1.7 சதவீதமும், பேங்கிங் இன்டக்ஸ் 1.4 சதவீதமும் சரிந்திருந்தன. பேங்கிங் பிரிவில் இன்டுசின்ட் பேங்க், ஓ.பி.சி.,மற்றும் கோடக் மகேந்திரா பேங்க் பெரும் சரிவை சந்தித்திருந்தன. ரியாலிட்டி இன்டக்ஸ் 1.2 சதவீத சரிவை அடைந்திருந்தது. ஆனால் மெட்டல் இன்டக்ஸ் 1.2 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
Labels:
பங்கு சந்தை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment