Tuesday, June 16, 2009

இமயமலையின் பனி உருகி வருவதால் தென்ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பு : ஜான் கெர்ரி

இமயமலையில் இருக்கும் பனி உருகி வருவது தென் ஆசிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார் அமெரிக்க செனட் சபை உறுப்பினரான ஜான் கெர்ரி. இமய மலையில் இருந்து தொடர்ந்து பனி உருகிக்கொண்டு இருந்தால், அதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், அது அந்த பகுதிக்கு பேராபத்தாக முடியும் என்றார் அவர். தென் ஆசிய நாடுகளில், சீனாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான பகுதியில் வசிக்கும் சுமார் 100 கோடி மக்களுக்கு இமயமலை தான் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பனி 2035 க்குள் முழுவதுமாக உருகி விடும் என்கிறார்கள். அப்படியானால் அங்குள்ளவர்கள் நிலை என்ன ? என்று கேட்டார் கெர்ரி. நியுயார்க்கில் ' கிளைமேட் சேஞ்ச் ' குறித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜான் கெர்ரி இவ்வாறு கேள்வி எழுப்பினார். இமயமலையில் உற்பத்தியாகும் நதி நீர் இந்தியாவின் விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் அவர்களின் மத சடங்குகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை, இமயமலையில் உற்பத்தியாகும் நதி அங்கு பாயவில்லை என்றால் அங்கு விவசாயமே இல்லாமல் போய்விடும் என்றார் கெர்ரி.
நன்றி : தினமலர்


No comments: