Tuesday, June 16, 2009

கச்சா எண்ணெய் விலை குறைந்து 70 டாலராகியது

கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து வருகிறது. இன்று அதன் விலை பேரலுக்கு 70 டாலருக்கு வந்து விட்டது. ஐரோப்பாவின் கரன்சியான யூரோவுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாலும், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பயப்படுவதால் பங்கு சந்தைகள் சரிந்து வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்கிறார்கள். அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை, நேற்றைய விலையில் இருந்து 61 சென்ட் குறைந்து இன்று பேரலுக்கு 70.01 டாலராக இருந்தது. கடந்த வாரத்தில்தான் இது 73 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) 43 சென்ட் குறைந்து 69.81 டாலராக இருந்தது.
நன்றி : தினமலர்


No comments: