Monday, February 9, 2009

'சத்யம்' 3ம் காலாண்டு அறிக்கை : விரைவில் வெளியிட நடவடிக்கை

சிக்கலில் சிக்குண்டுள்ள சத்யம் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை விரைவாக வெளியிட புதிய இயக்குனர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடுகளால் சிக்கித் தவிக்கும் சத்யம் நிறுவனத்தை தூக்கி நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அரசு நியமித்த புதிய இயக்குனர்கள் குழு வந்த பிறகு சத்யம் நிறுவனத்தை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்த போட்டியிட்டன. இதன் காரணமாக, முடங்கிப்போன சத்யம் நிறுவன பங்குகள் சற்றே ஏறுமுகம் கண்டன. புதிய தலைமை செயல் அதிகாரியாக, சத்யம் நிறுவனத்தை சேர்ந்த ஒருவரான மூர்த்தி நியமிக்கப்பட் டார். இதன் காரணமாக மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில், சத்யம் நிறுவனத்தின் கணக்குளை சீர்படுத்தி ஒழுங்கு நிலைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் ஆறு மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது. புதிய தணிக்கையாளர்களாக சென்னை பிரம்மையா கம்பெனி, நிறுவனத்தின் உள்தணிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், வெளிநாட்டு தணிக்கை நிறுவனங்களான கே.பி.எம்.ஜி., மற்றும் டெலொய் ட்டி நிறுவனமும், சத்யம் நிறுவனத்தின் கணக்குகளை மறுதணிக்கை செய்ய புதிய இயக்குனர்கள் குழுவால் நியமிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டிலிருந்து கணக்குகளை தணிக்கை செய்து, நிறுவனத்தின் கணக்குகள் பழைய நிலைக்கு கொண்டு வர புதிய இயக் குனர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள் ளது. சத்யம் நிறுவனத்தின் இந்தாண்டுக்கான காலாண்டு அறிக்கையை விரைவில் வெளியிட இயக்குனர்கள் குழு விரும்புகிறது. வெளிநாட்டைச் ÷ச்ந்த இரு தணிக்கை நிறுவனங்களும் இதுவரை போர்டிடம் எவ்வித அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. இதற்கிடையில், மூன்றாம் காலாண்டு அறிக்கையை வெளியிடுவதற்கான காலத்தை நீடிக்க வேண் டும் என சத்யம் இயக்குனர்கள் குழு , செபியிடம் கோரிக்கை விடுத்துள் ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட மாதத்திற்குள் காலாண்டு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பது செபி வகுத்துள்ள விதிமுறையாகும்.
நன்றி : தினமலர்


No comments: