Friday, November 7, 2008

ரூ.699 கட்டணத்தில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானம்

மலேஷியாவை சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் - ஏசியா, டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூருக்கும் திருச்சிக்குமிடையே தினசரி நேரடி விமான சேவையை துவங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு அனுப்ப இருக்கும் நேரடி விமான சேவைக்காக புத்தம்புது ஏர்பஸ் ஏ - 20 விமானத்தை ஏர் -ஏசியா பயன்படுத்த இருக்கிறது என்று ஏர் - ஏசியா வெளியிட்ட செய்தி குறிப்பு சொல்கிறது. மேலும் இதனை கொண்டாடும் விதமாக, கோலாலம்பூரில் இருந்து திருச்சி வர ரூ.699 மட்டும் ( ஏர்போர்ட் டாக்ஸ்கள், எரிபொருள் சர்சார்ஜ் தனி ) ஸ்பெஷல் கட்டணமாக வசூலிக்க அது முடிவு செய்திருக்கிறது. ஆனால் இந்த குறைந்த கட்டணத்திற்கான டிக்கெட்டை பயணிகள், அக்டோபர் 30ம் தேதியில் இருந்து நவம்பர் 9 ம் தேதிக்குள் வாங்கி விட வேண்டும். பயண நாள் அடுத்த வருடம் ஜூலை 31 க்குள் இருக்கலாம். திருச்சியை தவிர மற்ற இந்திய நகரங்களுக்கும் இன்னும் ஒன்றரை வருடத்தில் நாங்கள் விமான சேவையை துவங்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஏர் - ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்ணான்டஸ் தெரிவித்தார்.சென்னை, கோல்கட்டா, கொச்சி, பெங்களுரு நகரங்களுக்கும் அதன் பின் புதுடில்லி மற்றும் மும்பைக்கு விமான சேவை நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்றார் ஃபெர்ணான்டஸ்.
நன்றி : தினமலர்


No comments: