Friday, November 7, 2008

ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை பெற்றது டெய்ச்சி சான்க்யோ

இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை ஜப்பானின் டெய்ச்சி சான்க்யோ நிறுவனம் முறையாக வாங்கிக்கொண்டது. ரான்பாக்ஸியில் மல்விந்தர்மோகன் சிங் குடும்பத்திற்கு இருந்த 34.8 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் டெய்ச்சி கைக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்துள்ளன. நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பங்குகளை எல்லாம் வாங்கி விட்டோம் என்று டெய்ச்சி சான்க்யோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகாஸி ஷோடா தெரிவித்தார். இதனை ரான்பாக்ஸியின் தலைமை செயல் அதிகாரி மல்விந்தர் மோகன் சிங்கும் ஒத்துக்கொண்டார். கடந்த ஜூன் மாதத்தில் ரான்பாக்ஸியில் மல்விந்தர் சிங் குடும்பத்திற்கு இருக்கும் பங்குகளில் 34.8 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும் வெளி சந்தையில் பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலை வைத்து 20 சதவீத பங்குகளையும் ரூ.22,000 கோடிக்கு அது வாங்கியது. இதன் மூலம் டெய்ச்சிக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்து விட்டன. மேலும் ரான்பாக்ஸியுடன் கூட்டு வைத்திருக்கும் இன்னொரு நிறுவனமான ஜெனோடெக்கின் பங்குகளையும் வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: