Friday, November 7, 2008

முன்னேறியது பங்கு சந்தை : சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை பங்கு சந்தை ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. பவர், ஆயில், மெட்டல், டெலிகாம், டெக்னாலஜி மற்றும் கேப்பிடல் குட்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன.உலக அளவில் பங்கு சந்தைகளில் இன்றுஏற்பட்டிருந்த முன்னேற்றம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. சென்செக்ஸ் 10,000 புள்ளிகளையும், நிப்டி 3000 புள்ளிகளையும் இன்று மீண்டும் எட்டியது. காலையில் உயரத்துவங்கிய இன்டக்ஸ், மதிய வேளையில் கொஞ்சம் இறங்கியது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் உயர துவங்கி விட்டது. அதிக அளவில் பங்குகள் வாங்கும் போக்கு தென்பட்டதால் சென்செக்ஸ் உயர துவங்கியது. இன்றைய முன்னேற்றத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., டி.சி.எஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் இன்ஃராஸ்டெரச்சர், ஹெச்.டி.எப்.சி., ஹெச்.டி.எப்.சி., பேங்க், ஆகியவை காரணமாக இருந்தன. இன்றைய முக்கிய வர்த்தக வேளையில் 10,065.37 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 230.07 புள்ளிகள் ( 2.36 சதவீதம் ) உயர்ந்து 9,964.29 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. 3,010.00 புள்ளிகள் உயர்ந்திருந்த நிப்டி, வர்த்தக முடிவில் 80.35 புள்ளிகள் ( 2.78 சதவீதம் ) உயர்ந்து 2,973.00 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. மொத்தம் ரூ.49,664 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமா, விரைவில் நிதி அமைச்சர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறார். மேலும் அவரது பொருளாதார குழுவைறயும் அறிவிக்க இருக்கிறார். இதையடுத்தும் சந்தையில் இனிமேல் மாற்றம் எற்படும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: