Friday, August 1, 2008

வீட்டு கடன் வட்டியை உயர்த்திய தனியார் வங்கிகள்


நாட்டின் மிக பெரிய வீட்டு கடன் வழங்கும் வங்கிகளான எச்.டி.எப்.சி.,மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,ஆகிய வங்கிகள் தங்கள் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியுள்ளன.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தொகை 12சதவீதமாக அதிகரிக்கும். நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி வைப்பு தொகைக்கான வட்டி வீதத்தை 0.75 லிருந்து ஒரு சதவீதமாக உயர்த்தியுள்ளது.இதை தவிர வீட்டு கடனுக்கான மாறுபட்ட (புளோட்டிங்)வட்டி வீதத்தை நேற்று முதல் அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் எச்.டி.எப்.சி.,வங்கியின் புதிய வாடிக்கையாளர்களுக்கான மாறுபட்ட வீட்டு கடன் குறைந்தபட்சம் 11.75 சதவீதமாக இருக்கும். நிரந்தர வட்டி வீதமான 14 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உயர்வின் மூலம் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதம் தற்போதைய 13.5 சதவீதத்திலிருந்து 14.25 சதவீதமாக உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

இது தவிர்க்க முடியாத ஒன்று.
வங்கிகள் இதை செய்யாவிட்டால் அதன் லாபம் குறைந்து அதன் பங்குகளின் விலை குறைய வாய்ப்பு உண்டாகும்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

ஆமாம் ,அப்படி இருத்தும் வெள்ளி கிழமை பங்கு சந்தை ஏறுமுகத்தில் இருந்தது