Friday, August 1, 2008

ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில


ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில உணவுப்பொருட்கள், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்தி நிதி கொள்கையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பருப்பு வகைகள், பழங்கள், வாசனை பொருட்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஜூன் 5ம் தேதி பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியதை அடுத்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 4.65 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.

நன்றி : தினமலர்


2 comments:

கோவை விஜய் said...

பனவீக்கம் 20 % ஆகும், மத்திய அரசு,மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கலின் ச்ம்பள உயுர்வுக்கு பிறகு எனும் சிலர் கணிப்பு உண்மையாய்விடுமோ?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பாரதி said...

அதை குறைக்க தான் இந்த வட்டி விகித உயர்வு