Monday, December 7, 2009

சொல்​ல​லாமா,​ கூடாதா?

வெளி​யூ​ருக்​குப் போவது என்று தீர்​மா​ன​மா​ன​வு​டன் நான் எடுத்த முடி​வைக் கேட்டு வீட்​டில் இருந்த யாரும் எது​வும் பேச​ வில்லை. சொல்​லப் போனால் வெளி​யூ​ருக்​குப் போகக்​கூட வேண்​டாம் என்றே அவர்​கள் நினைக்க ஆரம்​பித்​தார்​கள். நான் அவர்​க​ளைச் சமா​தா​னப்​ப​டுத்த விரும்​ப​வில்லை,​ அதே சம​யம் எடுத்த முடிவை செய​லாக்​கியே தீரு​வது என்ற எண்​ணத்​தோடு வீதி​யில் இறங்​கி​னேன். ​

​ அதற்​குள் என் வீட்​டார்,​ பக்​கத்து வீட்​டுக்​கா​ர​ர​ரி​டம் சுருக்​க​மா​கச் சொல்லி அவ​ரும் நான் தெருக்​கோ​டியை அடை​யும்​போது,​ ஏன் சார் விஷப் பரீட்சை,​ நான் வேணா 2 நாள் உங்க வீட்​டி​லேயே படுத்​துக் காவல் பார்த்​துக்​க​றேன் என்று முன்​வந்​தார். உங்​க​ளுக்​குச் சிர​மம் வேண்​டாம்,​ நாம் அர​சை​யும் நம்​பித்​தான் வாழ்ந்​தாக வேண்​டும் என்று சொல்​லி​விட்டு,​ காவல் நிலை​யம் நோக்கி நடந்​தேன். வெளி​யூர் போகும் அந்த 2 நாள்​க​ளும் போலீஸ்​கா​ரர்​கள் என் வீட்​டைப் பார்த்​துக் கொள்​ளச் சொல்ல வேண்​டும் என்​ப​து​தான் அந்த முடிவு.

​ போலீஸ் நிலை​யத்​துக்​குள் போன​போது கடா மீசை​யும் கலர் சொக்​கா​யும் போட்​டுக்​கொண்டு நாற்​கா​லியை அடைத்​த​படி ஒரு​வர் உட்​கார்ந்​தி​ருந்​தார். அவர்​தான் ரைட்​டர் என்று ஊகித்​தேன். முதல்​வர் கூடப் பதவி என்ற முள்​முடி இல்​லாத காலத்​தில் கலர் லுங்​கி​யு​டன் பேட்டி தந்த படத்தை சுப​மங்​க​ளா​வில் பார்த்​தி​ருந்​த​தால் உண்​மை​யி​லேயே இவ​ரும் பெரிய ரைட்​ட​ரா​கவே இருப்​பார் என்று ஊகித்​தேன். என் ஊகம் வீண் போக​வில்லை.

​ அதற்​குள் பேரி​ரைச்​ச​லோடு வந்த ஜீப்பி​லி​ருந்து காவல்​து​றைக்கே உரிய டிரேட் மார்க் தொப்​பை​யு​டன் ஒரு அதி​காரி யாரையோ வைத​ப​டியே உள்ளே மூச்சு வாங்​கிக்​கொண்டு வந்​தார். என்​னய்யா ஸ்டே​ஷன் லட்​ச​ணம் இது,​ எங்​கய்யா ஏட்டு,​ சூடா டீ சொல்​லுய்யா என்று உரத்த குர​லில் கட்​ட​ளை​யிட்​ட​ப​டியே இவன் யார் என்று என்​னைப் பார்த்​து​விட்டு ரைட்​ட​ரைப் பார்த்​தார்.

ரைட்​டர் தெரி​யாது என்​ப​தைக் ​ கண்​ணா​லேயே சொல்​லி​விட்டு விறைப்​பாக சல்​யூட் அடித்​தார். என்​னய்யா கேசு அது என்று கேட்​டுக்​கொண்டே அருகி​லி​ருந்த மர நாற்​கா​லி​யில் தன்னை புதைத்​துக் கொண்​டார்.

​ ரைட்​டர் எப்.ஐ.ஆர். ரிஜிஸ்​தரை அவ​ரி​டம் பணி​வா​கக் காட்​டி​னார். அவர் மீண்​டும் கொதிக்க ஆரம்​பித்​தார். நாம பொய் கேஸý​தான் போட​றோம்னு ஊர் பூரா பேச​றாங்க இதிலே என்​னயா பேரெல்​லாம் இப்​படி இருக்​குது,​ படி என்று உத்​த​ர​விட்​டார்.

​ ஒக்​கூர் மாசாத்​தி​யார்,​ காக்​கைப் பாடி​னி​யார்,​ வெண்​ணிக்​கு​யத்​தி​யார்,​ நப்​ப​ச​லை​யார்,​ குலோத்​துங்​கன்,​ பர​ணர்,​ கபி​லர்,​ பெருஞ்​சித்​தி​ர​னார்,​ இளங்கோ,​ புக​ழேந்தி,​ அம்​பி​கா​பதி என்று ரைட்​டர் உற்​சா​க​மா​கப் படித்​துக் கொண்டே போனார்.

​ நிறுத்​துய்யா,​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் கடைச்​சங்​கமா,​ இடைச்​சங்​கமா,​ தொழிற்​சங்​க​மான்னு அறி​ஞர்​க​ளா​லேயே சொல்ல முடி​யல்ல,​ நீ பாட்​டுக்கு இவங்க பேரை எழு​தி​யி​ருக்​கியே என்​னய்யா கேஸý என்று மீண்​டும் கேட்​டார்.

​ போக்​கு​வ​ரத்​துக்கு இடை​யூறு செய்​தது,​ பொதுச் சொத்​துக்​குச் சேதம் விளை​வித்​தது,​ அரசு ஊழி​யர்​க​ளைக் கடமை செய்ய விடா​மல் தடுத்​தது,​ தேசத்​துக்கு எதி​ரா​கக் கல​கம் செய்​தது என்று எல்லா செக்​ஷன்​ல​யும் புக் பண்​ணிட்​டேன்​(ஐ)​யா என்​றார். எனக்கே தூக்​கி​வா​ரிப்​போட்​டது.

​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் எந்​தக் காலத்​து​லயா அப்​ப​டிச் செஞ்​சாங்க என்று உண்​மை​யி​லேயே அழாக்​கு​றை​யா​கக் கேட்​டார் அந்த அதி​காரி. இன்​னிக்கு காலை​யி​லே​தான் சார் என்​றார் ரைட்​டர். எதுக்​காக,​ யார் இவங்க என்று மீண்​டும் கேட்​டார்.

​ விடி​கா​லைலே கரண்ட் போயி​டுச்​சாம் சார்,​ எங்க குடி​யி​ருப்​புக்கு மட்​டும் அடிக்​கடி கரண்ட் கட் செய்​வது சரியா என்று கேட்டு மறி​யல் பண்​ணி​னாங்க சார். இவங்​கள்​ளாம் ஒரு அர​சி​யல் கட்​சி​யிலே சேர்ந்​துட்​டாங்க சார். அங்க அவங்க பேரை​யெல்​லாம் இப்​படி சுத்​தத் தமிழ் பெயர்​களா மாத்​திட்​டாங்க சார் என்று ரைட்​டர் விளக்​கி​னார்.

செம்​மொழி மாநாடு நடக்​கப் போகிற சம​யத்​தில் இத்​தனை தமிழ்ப் புல​வர்​கள் கூண்​டோடு கைதா​கி​விட்​டார்​களே என்று திகைத்த எனக்​குப் புதிர் அவிழ்ந்​தது நிம்​ம​தி​யாக இருந்​தது.

​ அப்​போது திடீ​ரென யாரோ என்​னைப் பிடித்​துத் தள்​ளி​னார் போல இருந்​தது. கண்ணை விழித்​துப் பார்த்​தால் ஆபீ​சில்​தான் லஞ்ச் இன்​டெர்​வெல்​லுக்​குப் பிறகு அப்​ப​டியே சீட்​டில் தூங்​கி​ய​தும் அதெல்​லாம் பகல் கனவு என்​றும் தெரிந்​தது.

​ இனி ஊருக்​குப் போகக்​கூ​டாது,​ அப்​ப​டியே போவ​தாக இருந்​தா​லும் ​ போலீஸ்​கா​ரர்​க​ளி​டம் சொல்லி தொந்​த​ரவு செய்​யக்​கூ​டாது என்று தோன்​றி​யது.
கட்டுரையாளர் :ராணிப்​பேட்டை ரங்​கன்
நன்றி : தினமணி

2 comments:

basipam said...

சொல்​ல​லாமா
சார் ரொம்ப கஷ்ட்டப்பட்டு படிச்சு ஒன்னுமே இல்லையே சார்,​ கூடாதா?"

பாரதி said...

basipam nandri