பிரிட்டனின் மல்டிபார்ட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தை டி.வி.எஸ்., குழுமத்தின் அங்கமான டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனம், ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து அளிப்பதில் முன்னணியில் விளங்குகிறது. ராணுவம் மற்றும் பிற துறைகளுக்கான உதிரிபாகங்களையும் இந்நிறுவனம் தயாரித்தளிக்கிறது. ரூபாய் 475 கோடி வருவாய் பெற்று வரும் மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனத்தை வாங்குவதற்கு முக்கிய காரணம், டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கே என்று அந்நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் விற்பனை வருமானம் 2010-ம் ஆண்டில் ரூ. 1,000 கோடியும் 2012-ல் ரூ. 2,000 கோடியும் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி :தினமலர்
Friday, November 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment