Wednesday, September 2, 2009

டாடா இண்டிகாமில் புதிய திட்டம் அறிமுகம்

டாடா இண்டிகாமில் 'பே பர் கால்' எனும் புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து டாடா இண்டிகாம், சென்னை வட்ட தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹேமந்த் குமார் கூறியதாவது: முதன்முறையாக 'பே பர் கால்' இந்தியா முழுவதும் அறிமுகப் படுத்தப்படுகிறது. குழப்பமான கட்டணத் திட்டங்கள், பகல் - இரவு கட்டணங்கள், ஆன் நெட் - ஆப் நெட் உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்களிடம் ஏற்படும் குழப்பங்களை, இந்த புதிய திட்டம் குறைக்கிறது.
பல்வேறு கட்டணத் திட்டங்களில் ஒரு பைசா, 30 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் என்று மாறுபட்ட கட்டணங்களை செலுத்தி வரும் நிலை மாறி, ஒரு அழைப்பை எவ்வளவு நேரம் பேசினாலும், உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு ரூபாயும், எஸ்.டி.டி.,க்கு மூன்று ரூபாயும் செலுத்தும் வசதி அளிக்கப்படுகிறது. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. துவக்கத்தில் இந்த வசதி, பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். டாடா இண்டிகாமின் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள், 96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இந்த வசதியைப் பெறலாம். இவ்வாறு ஹேமந்த் குமார் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: